ஆல கால விடம் ஐயன் உண்ணக் கொடுத்தாரோ - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)
(1, 4 சீர்களில் மோனை)

ஆல கால விடந்தனையே
..அருந்தி னீரே சிவனாரே;
நீல நிறமாய்க் கண்டத்தில்
..நிறுத்தி யுலகுக் குயிர்கொடுத்தீர்!
மாலன் இறைவன் கடைந்துதந்த
..மாறா அமுதம் தேவருக்கும்
ஆல கால விடம்மட்டும்
..ஐயன் உண்ணக் கொடுத்தாரோ!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Jun-22, 7:28 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே