மதுரை சிப்பி விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்
நேரிசை வெண்பாக்கள்
முத்துச்சிப் பிக்குள்ளே சாய்ந்தமர்ந்து சிந்திக்கும்
முத்தான சிப்பி விநாயகனை - அத்தனை
எந்நாளும் வந்தனை செய்வோர்க்கு எல்லாமும்
வந்துசேரும் என்றே வணங்கு! 1
முத்தான சிப்பி விநாயகனை முன்னின்றே
அத்தனே ஆனைமுக னேயென்று – பத்தியுடன்
வந்தனை செய்வோர்க்கு வேண்டிய எல்லாமும்
முந்திவரும் என்றே முழங்கு! 2
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
