அருள் விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
நேரிசை வெண்பாக்கள்
அருள்நல்கும் நல்விநாய கன்தான் நலமே
தருவானே எந்நாளும் தன்னை - உருகியே
வேண்டிப் பிரார்த்தனை செய்வோர்க்கு; பேராளன்
காண்குவான் கண்ணில் எனக்கு! 1
நாம்நன்கு வாழ்ந்திட நன்மை வழங்கிடும்
ஓம்பு(ம்) அருள்நல் விநாயகனை - நாம்தொழவே
இன்னலைத் தீர்த்திடுவான்; இன்னருள் செய்திடும்
கன்னலன்ன கால்களைப் பற்று! 2
- விநாயகர் பட உதவி - தினமலர்