இதயத்தில் தித்திக்கும் எழில்,நி லாவே - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
(1, 5 சீர்களில் மோனை)
இளநீரின் சுவையினைப்போல் இதயத்தில் தித்திக்கும்
..எழில்,நி லாவே!
இளநெஞ்சம் ஊஞ்சலென ஆடிடுமே இன்பநிலா
..எழிலைப் பார்த்தே!
இளவேனிற் தென்றலென மனங்குளிரும் மலர்க்கூந்தல்
..எழிலைப் பாட;
இளமானே வான்நிலவே தெவிட்டாத பலாச்சுளையே
..இன்பத் தேனே!
– வ.க.கன்னியப்பன்