காரைப்பழம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
சீதக் கடுப்புஞ் செறித்தயிரத் தக்கடுப்பும்
ஓதுமதி சாரமும்போம் உண்மையே - மோதுகடல்
நீரைப் பருகுமுகி னேரளக மின்கொடியே
காரைப் பழத்திற்குக் காண்
- பதார்த்த குண சிந்தாமணி
இப்பழம் சீத இரத்தக் கடுப்பு, அதிசாரம் இவற்றை நீக்கும்