மாலைப் பொழுதெழுதும் வான்நீல ஓவியம்
மாலைப் பொழுதெழுதும் வான்நீல ஓவியம்
மேலை இளந்தென்றல் ஆடும் மலர்களும்
நீலவிழிக் காரி இவள்பே ரெழிலிலும்
சாலச் சிறந்ததோஇல் லை
-----ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
மாலைப் பொழுதெழுதும் வான்நீல ஓவியம்
மேலை இளந்தென்றல் ஆடும் மலர்களும்
நீலவிழிக் காரி இவள்பே ரெழிலிலும்
சாலச் சிறந்ததோஇல் லைஇல்லை இல்லை !
---மூன்று இல்லையால் கலிவிருத்தம்
----வெண்பாவை எளிதில் விருத்தம் ஆக்கிவிடலாம்
விருத்தத்தை வெண்பாவாக்குவது கடினம்
வெண்பாவின் தளை விதிகள் கட்டுக் கோப்பானது
விருத்தம் பாவினம் அதற்குத் தளை விதிகள் இல்லை