கஞ்சா எங்கே

கஞ்சா இல்லாமல்
ஒரு நொடியும் நான்
மகிழ்ந்திருக்க முடியாது.
கஞ்சா, கஞ்சா உன்னை மறைத்து
வைத்தது யார்?
மூன்று மணிநேரம்
கழிந்தது
பைத்தியமே பிடிப்பது போல்
உள்ளது கஞ்சா இன்றி.
எனதருமை மகளே கஞ்சா
எங்கு உள்ளாய் தங்கம்?
உனைப் பார்க்காமல்
ஒரு நொடியும்
என் பொழுது கழியாதே!

கஞ்சா ஐந்து வயது
பெண் குழந்தை
அவள் அத்தையுடன்
கடற்கரைக்குச் சென்றதை
மறந்துவிட்டீரோ மாமா?

ஆமாம் மங்கை
கஞ்சா என் தங்கை
பொங்குமாங் கடற்கரைக்குச்
சென்றதையே மறந்தேனே!

எழுதியவர் : மலர் (29-Jun-22, 2:24 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 58

மேலே