உழுவைக் கறி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

முழுதும் புசிக்கலாம் முள்ளுமில்லை அந்த
உழுவைக் குடற்பிணிவிட் டோடும் - வழுவான
முன்மலமுஞ் சாறும் முதிர்கரப்பான் உண்டாகும்
வன்முலையாய் நீயறிந்து வை

- பதார்த்த குண சிந்தாமணி

முள்ளில்லா உழுவைமீன் உடலிலுள்ள பலவித நோய்களைப் போக்கும்; பழமலத்தைப் போக்கும்; கரப்பானை உண்டாக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Jul-22, 7:53 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே