அன்னமிட்ட கைகாட்டும் அன்பு - நேரிசை வெண்பா

அமுத சுரபி 2022 சூன் மாத போட்டிக்கு அனுப்பியது!

நேரிசை வெண்பா

ஊரிலுள்ள இல்லார்க்(கு) உவப்புடனே தான்செய்தார்
காரிபோல் நெஞ்சினிலே கற்கண்டாய்; - மாரியைப்போற்
கன்னியப்பர் வள்ளளென்றே காண்கின்றார்; யாவர்க்கும்
அன்னமிட்ட கைகாட்டும் அன்பு!

- வ.க.கன்னியப்பன், மதுரை

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Jul-22, 12:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே