சில நேரங்களில்
இந்த பேனாவில்,
சில நேரங்களில்
காதலை ஊற்றி
எழுதுகிறேன்..
சில நேரங்களில்
நட்பை ஊற்றி எழுதுகிறேன்..
சில நேரங்களில்
அன்பை ஊற்றி
எழுதுகிறேன்..
எப்போது
என்னை முழுவதுமாய்
ஊற்றி எழுதப் போகிறேன்
என்பது மட்டும் தெரியவில்லை..
அன்புடன் ஆர்கே..