கவிதைக் குழந்தைகள்
கருத்துக்கள்(கரு) கூடி வராமல்
கலைந்து போனவை..
அவசர அவசரமாய்
குறை பிரசவமானவை..
சரியான நேரத்தில்
சரியான பதத்தில் வந்து உதித்தவை..
சற்றே தாமதமாய் கொஞ்சமும்
அலட்டிக் கொள்ளாமல்
வந்து சேர்பவை..
என
எனக்கு
பல கவிதைக் குழந்தைகள்
அன்புடன் ஆர்கே..