தலைக் குனிவு
கலி விருத்தம்
ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றுவோர்
பூசை முற்றும் நக்குபு புக்கென
ஆசை பற்றிஅறை யலுற்றேன் மற்றிக்
காசில் கொற்றத்து ராமன் கதையே ........ கம்பர்
வாய்ப்பாடு
தேமா. கூவிளம் கூவிளம் கூ விளம்
ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றுவோர்
கூவிளம் கருவிளமோ பதிலாக தேமா அல்லது புளிமா
அல்லது தேமாங்காய் இப்படி தக்கவாறு மாற்றி அடுத்து
வரும் சிரில் தக்கவாறு அமைப்பார்கள்
மூன்றாம் சீர் அவசியம் தவறின் நான்கில் மோனை வேண்டும்
முதல் வரியில் ஒன்று நான்கில் ஓ. ஊ. மோனை கம்பன் வைத்துள்ளாrr
2ஆம் வரியில் ஒன்று இரண்டு நான்காம் சீரில் மோனை கு, மு, பு கவனிக்க
மூன்றாம் வரியில் நான்கு சீரிலும் தவறாமல் மோனை. ஆ,பா, ய, மா கவனிக்க
4 ம் வரியில் ஒன்று மூன்று நான்கில் மோனை முறையே கா, ரா, க, கவனிக்க
கம்பனே விருத்ததில் 3 அல்லது. 4. ல்
மோனையை தவறாது வைக்க மற்றவர் மோனை இல்லாது எந்த
வாய்ப்பாடும் இல்லாமல் எழுதி இது கலிவிருத்தம் கலித் துறை
இன்னிசை வெண்பா நேரிசை வெண்பா என்று எழுதி
தமிழின் பெருமையை குலைத்து கம்பனின் பெருமையை
கெடுப்பது தமிழர்க்கு தலைக்குனிவு
காசில் கொற்றத்து ராமன் கதையே ........ கம்பர்
இந்த கம்பன் பாட்டில் வரவேண்டிய வாய்ப்பாடு
தேமா. கூவிளம் கூவிளம் கூ விளம்
வந்திருப்பதோ
தேமா தேமாங்காய் தேமா புளிமா
காசில் கொற்றத்து ராமன் கதையே
கொற்றத்து என்பது மூவசைச்சீர் கூவிளம் என்னும் ஈரசை சீருக்கு
பதில் மூவசை வரவே அடுத்த சிரில் ஒரு எழுத்தைக் குறைக்க
ராமனின் என்பதற்கு பதில் ராமன் கதையே என்று கம்பர்
மாற்றியுள்ளது கவனிக்கவும்
இப்படி இலக்கணமாய் சொற்களை தளையை சிறிது மாற்றி எழுதாமல்
நாலசை சீர்கள் ஐந்தசை சீர்கள் ஒற்றெழு ழுத்தில்லாமலும் வாய்ப்படில்லமலும்
எழுதுதல் முறையாகுமோ
மேலேயுள்ள கம்பர் பாடலை கீழேயுள்ளபடி மாற்ற என்ன லாபம்
ஓசை செய்யும் பாற்கடல் போந்தவோர்
பூசை நக்கிடத் தயங்கி நின்றது
ஆசை அடித்துக் கொண்டது ஆனால்
மீசையில் ஒட்டி விடுமே என
இரண்டாவது வரியில் மோனை யில்லை மோர்ந்திட என்று
சேர்க்திருக்க மோனை யாகுமல்லவா
கொஞ்சம் யோசனை செய்யத்தான் யாப்பில் விருத்தம் (அ) துறையோ
நாம் நினைத்தபடி மாற்றி எழுதலாம். அவசரத்தில் மாவை
யள்ளித்தெளிக்க கோலமாகாது
பூனை (பூசை) யின் கதையாய்ப் போகும்
பாற்கடலுக்கும் பூனைக்கும் என்ன சம்பந்தம் எழுதும்போதே
ஏட்டைக் கெடுக்காதீர்கள். விளையாட்டிற்கும் கம்பன் பாட்டை
கெடுக்கலாமோ? கூடாது
கம்பனே விருத்ததில் 3 அல்லது. 4. ல்
மோனையை வைக்க மற்றவர் மோனை இல்லாது ஏதோ
வாய்ப்பாடும் இல்லாமல் எழுதி இது கலிவிருத்தம் கலித் துறை
இன்னிசை வெண்பா நேரிசை வெண்பா என்று எழுதி
தமிழின் பெருமையை சீர் குலைத்து கம்பனின் பெருமையை
கெடுப்பது தமிழர்க்கு தலைக்குனிவு
கம்பனின் பாடல் மாதிரி எழுதுங்கள் கம்பனின் பாடலில்
திருத்தம் செய்து கம்பனை இழிவு படுத்தாதீர்
நன்றி
....

