காதல் பெட்டகம்
காலப் பெட்டகம்
பல ரகசியங்களை
தனக்குள்
அடக்கி வைத்து
எல்லோரையும்
தன் கட்டுப்பாட்டுக்குள்
கட்டி வைத்து
ஆட்சி செய்கிறது...!!
என் இனியவளே
நீயோ...
காலப் பெட்டகத்தை
மிஞ்சும் வண்ணம்
என்னை உந்தன்
"காதல்" பெட்டகத்தில்
அடக்கி வைத்து
ஆட்சி புரிகின்றாய்...!!
--கோவை சுபா