கோவை சுபாவுக்கு மானஸீகப் பொன்னாடை

இந்த எழுத்துத் தளத்தில் நுழைந்து இன்றோடு பதினோரு
ஆண்டுகள் நிறைவு பெறுகிறது யதேச்சையாக கோவை சுபாவின்
காதல் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் அழகிய கவிதை
கண்ணில் பட்டது. கவிஞர் கோவையாரை சிறப்பித்து
கௌரவிக்கும் வகையில் அவரது மூலக் கவிதையுடன்
மானஸீகப் பொன்னாடையாக எனது இரண்டு
யாப்பு வழி கவிதைகளையும் இங்கே தந்திருக்கிறேன்

நினைவுகள்

கண் மூடி அமர்ந்தாலும்
உன் நினைவுகள்
என் சிந்தையில் இருந்து
மறைவதில்லை...!!

மண் மூடி மறைந்தாலும்
உன் நினைவுகளோடு
காத்திருப்பேன்
விண்ணுலகத்தில்...!!

உந்தன் நினைவுகள்
எங்கும்... என்றும்
என்னோடு தான்...!!
--கோவை சுபா



கண்ணைநான் மூடினும் எண்ணமெலாம் நீதானே
மண்ணை விடுத்துப்போ னாலும் உனக்காக
விண்ணில்நான் காத்திருப் பேன்
----சிந்தியல் வெண்பாவாக

கண்ணைநான் மூடினும் எண்ணமெலாம் நீதானே
மண்ணை விடுத்துப்போ னாலும் உனக்காக
விண்ணில்நான் காத்திருப் பேன்உயிர்க் காதலில்
கண்ணே கலைமானே காதல் தேவதையே
-----கலி விருத்தமாக

எழுதியவர் : கோவைசுபாகவின் (15-Jul-22, 10:13 am)
பார்வை : 41

மேலே