வண்ண ஒளியில் மது மாது 555

***வண்ண ஒளியில் மது மாது 555 ***
ஒளி ஒலி...
வண்ண வண்ண
விளக்குகள் பல ஒளிர...
வண்ண
வண்ண ஆடைகளில்...
பல எண்ணம்
கொண்ட பூவைகள்...
போர்த்திய
ஆடைகளில் சிலர்...
குறைந்த
ஆடைகளில் பலர்...
பார்வையிலே கன்னிமாடத்தை
சூறையாடும்...
நூற்றுக்கணக்கான
ஆடவர்களின் கண்கள்...
கண்ணாடி ஜாடியில் மது
மேடையிலே மாது...
கவலை கொண்ட
சில கண்கள்...
போதையில்
பல கண்கள்...
ஜாடியில் குறையாது மது
மேடையில் நடனமாடி சோர்ந்த மாது...
போதை ஏற்றாத
கண்ணாடி ஜாடியும்...
போதை ஏற்றும்
அவள் பார்வையும்...
ஓயாத அவள் கால்கள்
ஓயாத ஆடவர்கள் கண்கள்...
போதையில் புரியாதது
பூவை அவள் சாவில் புரியுமோ...
மதுவின் பழக்கம்
பேதையின் கலக்கம்.....
***முதல்பூ.பெ.மணி.....***