மகித்தும் சகித்தும்

மஹித்தும் சஹித்தும்
@@@@@@@@@@

முதல் மகப்பேறு
எதிர்பார்த்தபடி ஆண்குழந்தை
ஒன்றல்ல இரண்டு
இருவருக்கும் இந்திப்
பெயர் வைக்க வேண்டுமே!

தமிழ்ப் பெயர்களை வைப்பது
கொள்ளுத் தாத்தா காலத்திலயே
சுருங்கிப் போகத் துங்கியது
திரையாளிகள் பங்கும் உண்டு.

பெயர்களைத் தேடினேன்
வலைத்தளத்தில்
முதல் பையன் மஹித்
இரண்டாவது பையன் சஹித்.

அழகான பெயர்கள்
தமிழர் பெரும்பாலோரின்
காதுகளில் தேன் பாயும் பெயர்கள்
"ஸ்வீட் நேம்ஸ்" என்பார்கள் ஐயமில்லை!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Mahit = honoured
Sahit = bounded
(Masculine names)

எழுதியவர் : மலர் (15-Jul-22, 7:14 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 55

மேலே