இதோஅந்த டைரி விரிகிறது கையில்

புதுக் கவிதை :

புத்தாண்டில்
புதுடயரி எழுதத் துவங்கினேன்
அதில் உன்னைப் பற்றி மட்டுமே எழுதினேன்
இதோ திருப்பிப் பார்க்கிறேன்
அது ஒரு கவிதைப் புத்தகமாக
என் கையில் விரிகிறது !

யாப்பில் கலித்துறை எனும் பாவின வடிவம் ::

புதுடயரி ஒன்று எழுதத் துவங்கினேன் புத்தாண்டில்
அதில்நான் எழுதியது எல்லாம் உன்னைப் பற்றித்தான்
இதோஅதைத் திருப்பிப் பார்க்கிறேன் ஒர்கவிதைப் புத்தகமாய்
அதுஎன் கையினில் மலர்போல் அழகில் விரிகிறது !

இப்பொழுது வெண்பா வடிவில் முயல்வோம் ---

புதுடயரி ஒன்று எழுதினேன்புத் தாண்டில்
அதில்உன்னை மட்டுமே நானெழுதி வைத்தேன்
இதோஅந்த டைரி விரிகிறது கையில்
புதுமலர் போலழ கில் !

---முயற்சிக்குப்பின்தான் இந்த ஒரு விகற்ப வெண்பாவாடிவம்
கிடைத்தது யாப்பார்வலர்கள் மாற்றங்களை கூர்ந்து
கவனிக்கவும்
புதுடயரி ஒன்று எழுதினேன்புத் தாண்டில்
அதில்உன்னை யேஎழுதி வைத்தேன்-- மதிபார்
இதோஅந்த டைரி விரிகிறது கையில்
புதுமலர் போலழ கில் !

----இரண்டவது அடியில் மதி பார் என்ற தனிச் சொல் பெற்று
நேரிசை வெண்பாவாக மாற்றியிருக்கிறேன்
சிறு முயற்சியில் வெண்பா வடிவமும் கிடைத்து விட்டது
என்பதை யாப்பார்வலர்கள் கவனிக்கவும்

எழுதியவர் : கவின் சாரலன் (16-Jul-22, 6:50 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 40

மேலே