ஹைக்கூ முயற்சி

மரத்தடியில் வெளிச்சப் புள்ளிகள்
செங்கால் புறா நடை அங்கும் இங்கும்;
சோளம் கொரித்துக்கொண்டு ஒருவன்
‐--‐------------ ‐-----------‐---------- --‐------------‐ ----------‐-------
நான் புல்வெளி, என்னைக் காதலி
தோட்டத்தில் வாசகம் ;
மதியம் ஈக்களும் எறும்புகளும் புல் மேல்
‐--‐------------ ‐-----------‐---------- --‐------------‐ ----------‐-------
பின்னிரவில் பாடல்கள்
பலர் தூக்கத்தில் ;
ஒருவர் மட்டும் தூங்காமலிருக்க
‐--‐------------ ‐-----------‐---------- --‐------------‐ ----------‐-------
முன் மாலை அருவியின் சாரல்
அதிலே, பற்பல வண்ணங்கள் ;
பிஞ்சுக் கைகளின் அழைப்பால் கவனிக்கப்படாமல்
‐--‐------------ ‐-----------‐---------- --‐------------‐ ----------‐-------
வண்ணத்துப்பூச்சி கண்ணாடிச் சுவற்றில்
வெளி செல்ல முயற்சி ;
உள்ளே பலர் ரசிக்கையில்
‐--‐------------ ‐-----------‐---------- --‐------------‐ ----------‐-------
- நா முரளிதரன்

எழுதியவர் : நா முரளிதரன் (17-Jul-22, 6:11 pm)
சேர்த்தது : நா முரளிதரன்
பார்வை : 217

மேலே