தேடல்

தேடலற்ற வாழ்க்கை சூன்யமானது..
வாழ்வில் உயிரோட்டம் நிலைக்க
தெவிட்டாத தேடல் தேவை!
மழலை தாயைத் தேடுகிறது...
குழந்தை தோழமைத் தேடுகிறது...
இளமை துணையைத் தேடுகிறது...
ஏழ்மை பணத்தைத் தேடுகிறது...
பணம் நிம்மதியைத் தேடுகிறது...
காவி சுயத்தைத் தேடுகிறது...
முதுமை ஆதரவைத் தேடுகிறது...
நான் மனிதனைத் தேடுகிறேன்
கிடைக்கவில்லை...
தேடலின் முற்றுப்புள்ளி மரணம்.