கூற்றம் அறமுணர்த்தும் அன்னவர்க்கே ஆம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
மூர்க்கனுக்கும் துட்டனுக்கும் மூடனுக்கும் பேதமில்லை;
ஆர்ப்பரித்துப் பேசுவதில் அர்த்தமில்லை; – கூர்த்த
அறிவிருந்தால் குற்றமின்றி ஆய்ந்திடுவர்; கூற்றம்
அறமுணர்த்தும் அன்னவர்க்கே ஆம்!
- வ.க.கன்னியப்பன்