எங்கள் தமிழ்த் தாய்
குன்றா சீரிளமைக் கொண்டாள் எங்கள்
என்றும் இனிக்கும் தீந்தமிழ் மங்கை
அதனால் எங்கள் தமிழ் கன்னித்தமிழ்
அன்பின் உறைவிடம் எங்கள் தமிழ்
தமிழ் நாட்டில் வந்தோரை எல்லாம்
இனிதே தன் அரவணைப்பில் குன்றா
அன்பு கரம்கொண்டு வாழவைப்பாள்
எங்கள் நாட்டின் தென் திசைக்கு
காவல் தெய்வம் அன்னைக் குமாரி
எங்கள் பேச்சிலும் எழுத்திலும் இன்னும்
இசையிலும் வாழ்கை நடை முறையிலும்
என்றும் தமிழ் மணமே எங்களுக்கு
கன்னித் தாய் எங்களை வாழவைக்கும்
வைகைத் தந்த கன்னி தமிழ்த்தாய்