ஆங்கவர் வாக்கில் தழைக்கும் அருங்கவிதை தான் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

நுழைந்தனர் பற்பலரும் நூற்றுவராய் இங்கு
விழைந்தனர் தம்மெண்ணம் வேண்டிச் - செழிக்க
அழைத்தாள் தமிழன்னை; ஆங்கவர் வாக்கில்
தழைக்கும் அருங்கவிதை தான்!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Jul-22, 10:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே