வசம்பு - கட்டளைக் கலித்துறை
கட்டளைக் கலித்துறை
பாம்பாதி நஞ்சற் புதப்புண் வலிவிட பாக(ங்)குன்மஞ்
சூம்பாரி ரத்தபித் தம்முக நாற்றம்வன் சூலைசந்நி
வீம்பாம்பை சாசம் பிலீகஞ் சிலிபதம் வீறிருமல்
தாம்பாங் கிருமி யிவையேகும் மாசி வசம்பினுக்கே!
வசம்பு தாமிரவிடம் முதலான விடங்கள், புண், வலி, விடபாக நோய், குன்மம், இரத்த பித்தம், வாய் நாற்றம், சூலை, சன்னிபாதம், பீலிகம், பீனசம், பாத அழற்சி, காசம், வயிறுப்பல், நீண்ட மலக்கிருமி இவை போகும் .