வாழ்வியல் குறள்

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக (391)


பரிமேலழகர் உரை: கற்பவை கசடு அறக் கற்க - ஒருவன் கற்கப்படு நூல்களைப் பழுதறக் கற்க, கற்றபின் அதற்குத் தக நிற்க - அங்ஙனம் கற்றால், அக்கல்விக்குத் தக அவை சொல்லுகின்ற நெறிக்கண்ணே நிற்க. ('கற்பவை' என்றதனான், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் உணர்த்துவன அன்றிப் பிற பொருள் உணர்த்துவன, சின்னாள் பல்பிணிச் சிற்றறிவினர்க்கு ஆகா என்பது பெற்றாம். கசடறக் கற்றலாவது: விபரீத ஐயங்களை நீக்கி மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல். நிற்றலாவது: இல்வாழ்வுழிக் 'கருமமும் உள்படாப் போகமும் துவ்வாத், தருமமும் தக்கார்க்கே செய்தலினும் (நாலடி. 250) துறந்துழித் தவத்தான் மெய் உணர்ந்து அவா அறுத்தலினும் வழுவாமை. சிறப்புடை மகற்காயின் கற்றல் வேண்டும் என்பதூஉம், அவனால் கற்கப்படும் நூல்களும், அவற்றைக் கற்குமாறும், கற்றதனால் பயனும் இதனாற் கூறப்பட்டன.)

மணக்குடவர் உரை: கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க: கற்றபின்பு அக்கல்விக்குத் தக ஒழுக. இது கற்கவும் வேண்டும்: அதனைக் கடைப்பிடிக்கவும் வேண்டுமென்றது.

மேற்கூறிய புலவர்களின் விளக்கமே அருமை இருப்பினும் எதற்கோ 300 வருக்கும் மேலே பலரும்
திருக்குறளுக்கு உரை எழுதிக் குழப்பினார்கள்

மு. வரதராஜனும் சரியாக எழுதினார் கீழேக் காணவும்


கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை : கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க.

கலைஞர் உரை : பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும் கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்


மு. வரதராசன் உரை : கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

சாலமன் பாப்பையாவும் : சரியாகவே அதையே வலியுறுத்து சொன்னார் கீழ்க் கண்டவாறு

கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க.

கலைஞர் கடைசியாக எழுதிய உரை சரியாக உள்ளதா இது தேவையா சொல்லுங்கள்

: பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும் கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்


நிற்க என்றால் காலூன்றி நிற்க என்பதேப் பொருள் இது தவறு என்று வாதிட்டு ஒழுகு என்று இருக்க வேண்டும் என்று திருக்குறளை திருத்தச் சொல்கிறான் பாவி. இவரெல்லாம் தமிழ் வாத்திமாராய் வந்து எந்த உண்மையைச் சொல்லுவார் பாருங்கள்


......

எழுதியவர் : பழனி ராஜன் (25-Jul-22, 12:41 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 22

மேலே