கற்பவை

ஒரு விகற்ப நேரிசை வெண்பா


கல்லா ததுலகள வாமென யாப்பினை
கல்லா துவிட்டார் அறிவீலி -- பொல்லாத
வில்லர் எடுத்துரைத்தும் கேளாச் செவிடராம்
கொல்வர் எதுகைமோனை விட்டு

கற்க = நல்லத் தமிழினை கற்றுக்கொள்
கசடற. = குற்றமில்லாதத் தமிழைக் கற்றுக்கொள் ( யாப்புடன்)
கற்பவை = அப்படிக் கற்க வேண்டிய தமிழ் யாப்பினை என்று
கற்றபின் = கற்றுத் தெளிந்தபின்
நிற்க== நிற்க என்றால் பின்பற்றுக என்று
அதற்குத். =. யாப்பினைப் பின்பற்று
தக =. தக்கவாறு என்று பொருளாம்


......

எழுதியவர் : பழனி ராஜன் (25-Jul-22, 12:06 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 43

மேலே