பள்ளி மணி
காரிடாரில் தான் கண்டேன் அவளை...
கண்டதும் கனவிலும் இரவுகள் பகலாய் !
அவளே வந்து அன்பாய் பேசினாள்! அதிசயம்.
உன்மேல் "க்ரஷ்" என்றாள், நான் அதை காதலாக சொன்னேன்.
கடலுக்கும் பெருங்கடலுக்கும் உள்ள வித்தியாசம்
கனவில் தெரியுமா என்ன?
தேர்வுகளுக்கு "ஆல் தீ பெஸ்ட் " கூறுவதுதான் எந்தன் காதல் மொழி,
தேர்வு முடிந்தவுடன் அவளை தேடும் எந்தன் விழி.
பள்ளி நேரம் முடிந்தது, பகல் கனவும் கலைந்தது.
காற்புள்ளி போட்டு "கடைசிவரை " என்று கருதிய காதலை,
முற்றுப்புள்ளியுடன் முடித்தது "பள்ளி மணி ".
---- பத்ரி

