இன்பச் சக்கரம்

விழியில் விழுந்து - என்
இதயம் நுழைந்தாய்.
இதயம் நுழைந்து - பல
மாயம் செய்தாய்.
மாயம் செய்து - மன
காயம் ஆற்றினாய்.
காயம் ஆற்றிய - என்
காலம் கவர்ந்தாய்.
காலம் கவர்ந்தே - என்
வாழ்வில் நிறைந்தாய்.
வாழ்வில் நிறைந்தே - என்
தாழ்வை நீக்கினாய்.
தாழ்வை நீக்கியே - என்
விழிகள் நனைத்தாய்.
விழிகள் நனைத்தே - என்
வழிகள் மாற்றினாய்.
வழிகள் மாற்றியே - என்
விழியில் விழுந்தாய்.
விழியில் விழுந்து - என்
இதயம் நுழைந்தாய்.
சுற்றிக்கொண்டே இருக்கும்
இது ஒரு
இன்பச் சக்கரம்

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (10-Aug-22, 9:05 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : inpach chakkaram
பார்வை : 85

மேலே