நீள் காதலி

உன்னை பார்க்கும்போது நீ
மண்ணை பார்க்கிறாயே...
கால்விரலால் தரையில்
கோலம் போடுகிறாயே....
கைவிரல் நகம் கடித்து
ரத்தம் கசிகிறதே...
கசியும் ரத்தமென உன்
முகமும் சிவக்கிறதே...
ஜன்னல் ஒர
ஏக்க விழிகளால்
வெறிச்சோடிய தெருவில்
என்னைத் தேடுகிறாயே...
என் கோலம் காண
வாசல் கோலம் போட
தாமரையாய் காலையில்
மலர்கிறாயே...
தெரிந்தோ தெரியாமலேயோ
என் விரல் உன் மீது
பட்டுவிட்டாலோ
'ஐயோ ' என்று மானென
துள்ளி குதித்து ஓடுகின்றாயே....
அருகில் வா
உன் இதழ் தேனை
என் இதழ் கொண்டு உறிய
ஊ..ஊ...என் இதழ் குவிய
சட்டென்று பேய்மழை
கொட்டியது என் மேல்..
'விடிஞ்சி எவ்வளவு நேரமாச்சு
இன்னமும் தூக்கத்தைப் பாரு'
கொட்டிய வாளியோடு
அவதாரமாய் நிற்கும்
என் தாரம் -எந்தன்
நீள் காதலி

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (10-Aug-22, 9:58 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : neel kathali
பார்வை : 73

மேலே