தீ மூட்டும் ஞாபகங்கள்

தீ மூட்டும் ஞாபகங்கள்*

சின்னச்சின்ன ஞாபகங்கள்
சிறிய பெரிய ஞாபகங்கள் வண்ண வண்ண ஞாபகங்கள் வலுவிழந்த ஞாபகங்கள்!

எண்ண ஒட்டாது ஏங்கித் தவிக்கும் ஞாபகங்கள்!

ஐந்து வயதில் அல்லிக்கொடி பறிக்கப் சென்ற ஞாபகம்!

பத்து வயதில் பள்ளி வகுப்பறை அறியா பாழ் ஞாபகம்!

16 வயதில்
இளமை இன்பம் மறந்த ஏழ்மை ஞாபகம்!

இருபது வயதில்
குடும்பச் சுமை
கும்மி யடித்த
குறு அகவை ஞாபகங்கள்

என்றும் என்னுள்
தீ மூட்டும் ஞாபகங்களே!

மா.தமிழ்ச்செல்வி

எழுதியவர் : மா.தமிழ்ச்செல்வி (10-Aug-22, 11:08 pm)
சேர்த்தது : Dr M Tamilselvi
பார்வை : 89

மேலே