காதல் கவிதை

💔💔💔💔💔💔💔💔💔💔💔

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

💔💔💔💔💔💔💔💔💔💔💔

அன்று
கடற்கரையில்
அமர்ந்துக்கொண்டு
சொன்னாயே!
'நீ இன்றி
நான் கல்லறைக் கூட
போக மாட்டேன்' என்று
எப்படி பெண்ணே
போனாய்
மணவறைக்கு....?

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

கையில்
மலர்வளையத்தை வைத்துக்கொண்டு என்ன பெண்ணே
யோசிக்கிறாய்....?

ஓ......!
இத்தனை கல்லறையில்
என்னுடையக் கல்லறை
எது என்று
எப்படி கண்டுபிடிப்பது என்று தானே...?

அது மிகவும் எளிது....
எந்த கல்லறை
ஈரமாக
இருக்கிறதோ
அதுதான் என் கல்லறை....

நான்
இறந்துவிட்டேன் என்பதற்காக....
உன் நினைவால்
வடியும் கண்ணீர்
நின்றுவிடவாப் போகிறது....?

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

என்னவளே!
என்னிடம் இருப்பதிலேயே
எனக்கு
மிகவும் பிடித்தது
என்னுடையக் கண்கள்....
ஆம்.....!
அதுதானே
உனக்காக அழுகிறது....!

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

நான்
இறந்தப் பிறகு
என் கண்களை
தயவு செய்து
மூடி விடாதீர்கள்...
அவள்
எனக்கு
அஞ்சலி செலுத்த
வந்தாலும் வருவாள்...
கடைசியாக
ஒரே ஒருமுறை
அவளைப்
பார்த்து விட்டுச் செல்கிறேன்....!

*கவிதை ரசிகன் குமரேசன்*

💔💔💔💔💔💔💔💔💔💔💔

எழுதியவர் : கவிதை ரசிகன் (11-Aug-22, 8:31 pm)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 74

மேலே