வாழ்க்கை
விலங்குகள் ஒன்றும் ஆடை அணிவதில்லை
விலங்குகளில் அவலட்சணம் யாதும் இல்லையே
அரைகுறை ஆடையில் அல்லது ஆடையின்றியே
சில மனிதர்கள் காட்சி தருவது அவலட்சம்
அது அதற்கு எதுவோ அதுவே
பொருந்தி அமையும் அழகு என்பது
வல்லவன் வகுத்த வழி யாகும்
அதை மாற்றி நினைத்து தன்வழியில்
போவது மனிதன் அகம்பாவம் மூடமை
அதுவே பேதைமை என்பது அறிவோம்