குறையும் அழகே - வெண்பா

ஒரு விகற்ப நேரிசை வெண்பா



நிறையுடை​ மாந்த ரெவருமில் கூனின்
குறைநோக் கிணங்கே தணவே - அறிவீர்
பிறைமதி உட்குறைவும் கொஞ்சும் மழலைக்
குறையுடைச் சொல்லும் அழகு




கூ - உலகு
தணவு - பிரிவு

எழுதியவர் : சு.அப்துல் கரீம் (17-Aug-22, 12:06 am)
சேர்த்தது : சு அப்துல் கரீம்
பார்வை : 81

மேலே