இறைஆ கமமிதனை வென்றார்சென் றாரின்ப வீடு - உண்மை விளக்கம் 13

திருநெறி 4 – திருவதிகை மனவாசகங் கடந்தார் அருளியது.
நேரிசை வெண்பா

நன்றாக நீரிடமாய் நாஇரதந் தானறியும்
பொன்றா மணம்மூக்குப் பூவிடமாய் – நின்றறியும்
என்றோதும் அன்றே இறைஆ கமமிதனை
வென்றார்சென் றாரின்ப வீடு. 13

- உண்மை விளக்கம்

பொழிப்புரை:

நன்மையாக அப்புவினிடமாக நின்று சிகுவை இரசத்தை யறியும்,

கெடாத பிருதிவியினிடமாக நின்று ஆக்கிராணங் கந்தத்தை யறியும் என்று சிவாகமங்களிலே அநாதியே சொல்லும்,

இந்தப் பஞ்சேந்திரியங்களை நிக்கிரகம் பண்ணினவர்களே ஆனந்த வீட்டினை அடைந்தார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Aug-22, 6:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

மேலே