அங்கி விரவிப் பார்வையிற் கண் உருவங் காணுமே - உண்மை விளக்கம் 12
திருநெறி 4 – திருவதிகை மனவாசகங் கடந்தார் அருளியது.
நேரிசை வெண்பா
வானிடமாய் நின்றுசெவி மன்னும் ஒலியதனை
ஈனமிகுந் தோல்கால் இடமாக – ஊனப்
பரிசம் தனைஅறியும் பார்வையிற்கண் அங்கி
விரவியுரு வங்காணு மே. 12
- உண்மை விளக்கம்
பொழிப்புரை:
ஆகாயத்தினிடமாக நின்று சுரோத்திரம் பொருந்திய சத்தத்தை யறியும்,
வாயுவினிடமாக நின்று ஈனத்துவ மிக்க தொக்கு குறைவுடைய பரிசத்தை யறியும்,
தேயுவினிடமாக நின்று பார்வையினை யுடைய சட்சு உருவத்தை யறியும்.