பெரும்பழியும் பேணாதார்க்கு இல் - பழமொழி நானூறு 170

நேரிசை வெண்பா

உரிஞ்சி நடப்பாரை உள்ளடி நோவா
நெருஞ்சியும் செய்வதொன்(று) இல்லை - செருந்தி
இருங்கழித் தாழும் எறிகடல்தண் சேர்ப்ப!
பெரும்பழியும் பேணாதார்க்(கு) இல். 170

- பழமொழி நானூறு

பொருளுரை:

செருந்தி மரங்கள் பெரிய உப்பங்கழியில் தாழ்ந்து விளங்கும் அலைகளை வீசுகின்ற குளிர்ந்த கடல் நாடனே!

அஞ்சாது உராய்ந்து நடப்பவர்களை அவர் உள்ளங் கால்கள் வருந்தும்படி நெருஞ்சி முள்ளும் ஊறு செய்வதில்லை;

மிக்க பழியும் தன்னை அஞ்சிப் பொருட்படுத்தாதவர்களுக்கு மனவருத்தம் செய்தல் இல்லை.

கருத்து:

நல்லோர் பழிக்கு அஞ்சுவர், தீயோர் அஞ்சார்.

விளக்கம்:

பேணாதவர்க்கு மனவருத்தம் இல்லை என்று குறிப்பால் தீயோரை இகழ்ந்தவாறு.

'பெரும்பழியும் பேணாதார்க்கு இல்' - இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Aug-22, 9:24 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

சிறந்த கட்டுரைகள்

மேலே