இழப்பீடு

அம்மா ! போஸ்ட் என்ற சப்தம் கேட்டு கண் விழித்தாள் காயத்ரி . கடித்தை வாங்கியவள் பிரித்து பார்க்காமல் டேபிளில் வைத்து விட்டு சமையல் வேலையில் சங்கமித்தாள் எட்டி மணியைபார்த்தவாறு , மணி 5 யை காட்டியது . ஆம் ! மகனும் மகளும் வரும் நேரமல்லவா ? சாப்பிட ஏதாவது செய்தாகணுமே என்று பரபரப்பானாள் .
அம்மா ! என்றே நுழைந்தவாறு சாப்பிட என்ன என்று கேட்டு ரூமிற்கு சென்றால் மகள் மீனா , காயத்ரி தான் சமைத்த பட்சி மற்றும் டீ எடுத்துவந்து டேபிள் மேல் வைத்தால் அதற்குள் , மகன் கதிர் வந்துவிட்டான் மூவரும் ஸ்னாக்ஸ் சாப்பிட்டுக்கொண்டே மகள் கல்லூரியில் நடந்ததை பேசிக்கொண்டிருந்தனர் . அப்போது ஞாபகம் வந்தவளாய் தபால் கவரை மகனிடம் கொடுத்தாள் . இருவரும் போட்டிபோட்டு வாங்கி படிக்க . அதை ஏதும் கண்டுகொள்ளாமல் காயத்ரி மீண்டும் , சமையல் கட்டில் நுழைந்து வேலையை தொடர்ந்தாள் .
கடிதத்தை படித்த இருவரும் அம்மா ! சீக்கிரம் வாம்மா என்று சேர்ந்தே அழைத்தனர். வாரேன் ஏன் கத்துகிறீர்கள் ? என்றவாறே வந்தவளிடம் கவரின் உள்ளே இருந்த செக்கை காண்பித்தனர் அனைவரின் கண்களிலும் பயங்கரமான மிரட்சியை காண முடிந்தது . அதில் ஒருகோடிக்கான தொகை என்று எழுதி இருந்தது . மூவரும் அப்பாடா ! நம்ம கஷ்டம் எல்லாம் தீர்ந்தது என மூவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர் . கதிரும் , தங்கையும் கணக்குப்போட தயாரானார்கள் . ஆம்! இருக்காதா பின்னே , அவளது கணவன் சுந்தரேசன் இறந்த பிறகு எத்தனை கஷ்டங்கள் கடன்காரர் அப்பப்பா ! பதில் சொல்லிமாளவில்லை இவர்களால் . கணக்கு போட்டு பார்த்ததில் படிப்பு செலவு , பெர்சனல் லோன் , சொந்தபந்த , தெரிந்தவர் என மொத்தம் 75 லட்சம் தாண்டியது , செலவு போக 25 தேறும் என்று மகன் சொல்ல , சரிப்பா நாளை அக்கோவுன்டில் போட்டு எடுத்துவா மொதல்ல கடன்களை எல்லாம் அடைத்துவிட்டு நிம்மதியா இருக்கலாம் என அம்மா சொன்னாள் . சரிம்மா என்று சொன்னவாறே உள்ளே சென்றான் கதிர் .
இரவு உணவை நிம்மதியோடு உண்டு , உறங்க சென்றனர் . ஆனால் அவள் மட்டும் சுந்தரேசனின் நினைவுகளை அசைபோட்ட வாரே அயர்ந்து தூங்கிவிட்டாள் . விடிந்ததும் , கதிர் கவர் மற்றும் பேங்க் பாஸ்புக் அனைத்தையும் எடுத்துக்கொண்டு ஆபீஸ் செல்ல தயாரானான் ,அதற்குள் தங்கை மீனாவும் கிளம்பிவிட்டாள் . இருவருக்கும் சமைத்து கொடுத்து அனுப்பி வைத்தாள் . இருவரும் அப்பாவின் இருசக்கர வாகனத்தில் சென்றதை மறையும் வரை வைத்தகண்வாங்காமல்பார்த்துக்கொண்டிருந்தாள் இதை பார்க்க ஆசைப்பட்ட அவர் இல்லையே என்று மனதிற்குள், புலம்பியவாறு உள்ளே சென்றாள் . மீண்டும் சுந்தரேசனின் நினைவுகளில் மூழ்கினாள் .
சுந்தரேசன் வாட்டசாட்டமான , பார்ப்பதற்கு அழகும் , பழகுவதற்கு இயல்பானவர். இருவரும் ஒரே ஆஃபிஸில் வேலை பார்த்து வந்தனர் இவளுக்கும் அவரின் மேல் காதல் வந்தது , இருவரும் விருப்பப்பட்டு திருமணம் செய்துகொண்டனர் . வெவ்வேறு ஜாதி என்பதால் இருவரின் குடும்பங்களிலும் ஏற்றுக்கொள்ளவில்லை . இருந்தும் மனம் தளராமல் நண்பர்களை வைத்து திருமணத்தை எளிதாகவும் , சிறப்பாக செய்து முடித்தனர் . சொந்த ஊரை விட்டு எதிர்காலத்தை கவனத்தில்கொண்டு திட்டமிட்டு லோன் மூலம் பிளாட் வாங்கி வீடுகட்டி குடிபெயர்ந்தனர் . நாளடைவில் இரண்டு பிள்ளைகள் ஆனதும் காயத்ரியை வேளைக்கு அனுப்பவில்லை . குடும்ப செலவு , கடன் அனைத்தும் சுந்தரேசன் வருமானதினால் மட்டுமே குடும்பம் ஓடியது . காலங்கள் உருண்டோடின பிள்ளைகள் வளர்ந்து பள்ளிப்படிப்பை முடித்தனர் .
சுந்தரேசனும் குடும்பத்திற்காக அல்லும்பகலும் அயராது உழைத்து வாழ்ந்து வந்தான் . இந்நிலையில்தான் கொரானாவின் கோரா தாண்டவம் தலைவிரித்து ஆடியது . உலகமே லாக்கடவுனில் முடங்கியது . அவனுக்கோ நிதிச்சுமை மேலும் கூடியது. பல நாட்கள் தூக்கமின்றி இரவினில் உலாத்தியது அவளுக்கு மட்டுமே அறிந்த உண்மை .
அவனது நினைவுகளை நினைவுகளில் மூழ்கியிருந்தபோது ,காயூ ,காயூ ! என யாரே கூப்பிடும் சப்தம் கேட்டு கண்விழித்து வெளியே வந்தாள் . எதிர் வீடு அம்புஜம் மாமி , என்னடி செய்ர? என்று கேட்டதை கூட கவனிக்காமல் . மணி 4 ஆயிடுச்சே புள்ளைங்க வரும்நேரம் இரு மாமி என்று, சமையல்கட்டில் நுழைந்தால் எதோ எடுக்கசென்றவள் , கண்ணில் பட்ட கணவரின் டைரியை எடுத்து படித்தாள். அதில் இவளது புகழ் அதிகமாக இருந்தது கண்டு மனம் குதூகலித்தது . பாதிக்கு மேல் படித்தவள் அதில் ஒரு ஆபீஸ் கவர் , 1 கொடிக்கான இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டின ரசீது அதோடு ஆபீஸ் லெட்டர் இருந்தன . கடிதத்தில் இருந்த வார்த்தைகளை படித்தவள் மயங்கி சோபாவில் சரிந்தாள் .
அப்படி என்ன எழுதியிருந்தியது ? கொரனா லாக் டவுன் காலங்களில் கம்பெனியின் நிதி பற்றாக்குறையின் காரணத்தால் ஆட்குறைப்பு செய்ய சொல்லி , மேலும் அதில் தன்னுடைய கணவரின் பெயரும் இருந்தது . இந்த கடிதத்திற்கு பிறகுதான் தன்னுடைய கணவனுக்கு விபத்து நடந்திருப்பதை அவளால் உணரமுடிந்தது . ஆம் ! அவளது யூகம் சரிதான் தன் குடும்பம் நடு தெருவிற்கு வந்து விட கூடாது என்ற காரணத்திற்காக தன்னால் விபத்தை ஏற்படுத்திக் கொண்டான் , அதன் மூலம் இன்சூரன்ஸ் பணம் குடும்பத்தை காப்பாற்றும் என்ற எண்ணத்தில் முடிவை தேடிக்கொண்டன் . என்பதை உணர்ந்த அவளது மனம் மேலும் வலியால் கனத்தது . அம்மா ! என்று சப்தம் கேட்டு கண்ணை துடைத்து வெளியில் சென்றாள் எதிரே சுந்தரேசனை கண்டால் . ஆம் ! மகன் சுந்தரேசனாக காட்சி தந்தான் . இவரைப்போல எண்ணற்ற தியாக உணர்வு கொண்ட சுந்தரேசன் இவ்வுலகில் மறைந்தும் , இருந்தும் வாழ்கின்றனர் கொரானா காலங்களில் .

எழுதியவர் : பரமgnanam (29-Aug-22, 9:15 pm)
சேர்த்தது : paramaGnanam
Tanglish : ilappeedu
பார்வை : 107

மேலே