மாலைப் பொழுதின் மயக்கத்திலே
மாலைப் பொழுதின் மயக்கத்திலே!⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
கிறங்கிச் சாயும் பொழுதினிலே உள்ளம் /
உறங்கிடும் முன்னே விழிப்பினிலே துள்ளும்/
மயங்கும் மாலைப் பொழுதினிலே முயக்கம்/
இயங்கும் உலகை இழுத்தேதான் வியக்கும் /
துடிக்கும் இளைமையில் துள்ளிடுமே இதயம் /
அடிக்கும் ஒலியால் அதிர்வலைகள் பதறும்/
இருவர் இணையும் இளமாலைப் பொழுது/
திருமண பந்தம் கனமான விழுது /
இன்றைய மகிழ்ச்சி தொடர்ந்திடுமே வாழ்வில்/
என்றுமே உறவுகள் இனித்திடுமே வாழ்க !!
-யாதுமறியான்.

