தண்ணீர்க் குடம் எடுத்து தனியாகப் போறவளே

நேர் வழிப் பாதையிலே
நேர் கொண்ட பார்வையுடன் /
நித்தமும் தண்ணீர்க் குடம்
எடுத்து தனியாகப் போறவளே /
ஏரிக் கரையோரமாய் அமர்ந்து /
ஏற இறங்க நான் பார்க்கையிலே /

அன்ன நடையினிலே என்னைக்
கொல்லும் நீயே என் சுகராசி /
அளந்து பேசி என்னுள்
வெறுப்பையேற்றாதே மகராசி /
அவஸ்தைகள் பல
எனது நெஞ்சத்திலே ஏத்தி/
அலட்டிக்காமல் நீயும் என்னைக் கடந்திடலாமோ ராசாத்தி /

கொடுக்கான் போல் சொல் அடுக்கி /
கொட்டுவது போல் நாக்கை நிறுத்தி/
இடுக்கும் நண்டாக இதழைப் பிதுக்கி/
கடுகடுப்பாக முகத்தை போக்கி /
தடுப்புச் சுவரொன்று எனக்குப் போட்டு தப்பிக்க நினைக்காதேம்மா தேவகி /

உன் மதி ஒளியோ ஆண்மையை
வெல்லும் பால் தேக்கமடி /
உனது கருவிழியோ ஆளைக்
கொல்லும் தாக்கமடி/
துள்ளி ஓடிடும் கெண்டைக்காலுக்கு
தண்டையாவேன் நானடி/
அசைந்து வெறுப்பேற்றிடும் இடையினிலும் ஊர்ந்து விளையாடிடப் போவதும் நானடி/

இதமாக நான் சொல்வதை
மெதுவாகக் கொஞ்சம் கேளடியோய் /
வெள்ளிக் குடத்தில் அள்ளிய நீரோ
கிள்ளிச் செல்கின்றாய்
என்னிதயமதையு பாரடியோய் /
குலுங்கிடும் போது தழும்பும் நீரிலே
விழுந்து கிடக்கிறேன் நானடியோய் /

தள்ளாத வண்டி நகராதம்மா/
சொல்லாத காதல் வெல்லாதம்மா/
தூறிய சாரலில் ஊறிய
காகிதம் போல் ஆன கதை தெரியுமா/
உன்னாலே நானும் பித்தனாய்
பக்தனாய் சித்தனாய் மாறிடலாமா
கர்த்தர் போல் வந்து பதிலொன்று கூறிடம்மா/

எழுதியவர் : ஆர் எஸ் கலா (1-Sep-22, 7:54 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 29

மேலே