பொன்மாலை வீணாகாதோ

சின்னயிடை அசைய செங்கமல மொக்கசைய
மின்விழியில் பொன்னந்தி மாலை கவிய
கன்னத்தில் சேலம் தோட்டம் அமைக்க
தென்றலாய் என்தோளில் கண்ணயர வந்தவளே !

சின்ன யிடையசைய செங்கமல மொக்கசைய
மின்விழியில் பொன்னந்தி மாலை கவிந்திட
தென்றலாய் என்தோளில் கண்ணயர லாமோநீ
பொன்மாலை வீணாகா தோ ?

யாப்பார்வலர் குறிப்பு :
---விருத்தம் சற்றுப் பொருள் மாறி வெண்பாவாக

எழுதியவர் : கவின் சாரலன் (1-Sep-22, 7:08 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 42

சிறந்த கவிதைகள்

மேலே