ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
வாழ்க்கை
என்னும் பள்ளியில்
நாம் எல்லோரும்
என்றும் மாணவர்களே...!!
பள்ளியில் பயிலும் போது
நமது ஆசான்களிடம்
நாம் கற்றுக் கொண்டது
ஏட்டு கல்வி...!!
வாழ்க்கை
என்னும் பள்ளியில்
அனுபவம் என்னும்
ஆசானிடம்
நித்தம் நித்தம்
நாம் கற்றுக் கொள்வது
வாழ்க்கை பாடம்...!!
இன்று "ஆசிரியர் தினம்"
நமக்கு பள்ளியில்
பாடம் கற்பித்த
ஆசிரியர்களை
மனதார நினைத்து
அவர்களை வணங்குவோம்
இந்த நன்னாளில்
ஆசிரியர்கள்
அனைவருக்கும்
இனிய "ஆசிரியர் தின"
வாழ்த்துக்களை கூறி
பெருமை கொள்வோம்...!!
--கோவை சுபா