கலங்காதே மனமே
யார் மனதில் யாரென்று
யாராலும் அறிய இயலாது
இன்னாருக்கு இன்னார் என்பதும்
அவன் போட்ட முடிச்சுதான்...!!
விதியின் கோட்டை
நீட்டவும்... சுருக்கவும்
விதியை வித்திட்ட
அவனுக்கே அனுமதியில்லை...!!
மனித வாழ்வில் வரும்
இன்ப துன்பங்கள் யாவும்
யாருக்கும் நிரந்தரமில்லை...!!
நாளை நடப்பதை
அவனின்றி யார் அறிவார்
மனித வாழ்வில்
நல்ல நேரம் என்பது
யாவருக்கும் வரும்..!!
எல்லாம் அவன் செயல்
என்பதை உணர்ந்து
மனம் கலங்காமல்
காத்திரு மனமே...!!
--கோவை சுபா