முடியும் உன்னால் முடியும்
விதை ஒன்று நீ வைத்தால்
வேர் ஒன்று முளைக்காத?
வெறி கொண்டு நீ உழைத்தால்
வெற்றி ஒருநாள் சேராதா?
சுயபுத்தி நீ கொண்டால்
உன்னை சுரண்ட பிழைப்பவன் எவன்?
கார்மேகம் வந்தால் தானே
கலாபம் ஆட்டம் கொள்ளும்
கஷ்ட மேகம் சுழ்ந்தல் தானே
கற்றுக்கொள்ள உன்னால் முடியும்
முடியும் என்ற விதை வைத்தால்
தன்னம்பிக்கை தளிர் முளைக்கும்!
மேகத்தை கூட மென் காற்று
தானே அடித்து செல்லும்!