மோனைத்தமிழ் முத்தோடும் முல்லை மலரிதழே

மோனைத்தமிழ் முத்தோடும் முல்லை மலரிதழே
வானை வெண்பா வாக்கும் வண்ணநிலவே
தேனைப்பிழி தென்றல்மலர் தென்பொதிகைத் தோட்டமே
மானைபோல் மௌனவிழி மரகத மயிலே !

கவிக்குறிப்பு :
மோனை முற்றும் மலர்ந்திருக்கும் முல்லை மலர்த்தோட்டம்
இந்த கலிவிருத்தம் என்பதை யாப்பு விழைவோர் கண்டு மகிழவும்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Sep-22, 9:23 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 50

மேலே