கயல்விழியால் காதல்மொழி பேசிடும்

கயல்விழியால் காதல்மொழி பேசிடும் நெடுநெய்தலே
புயல்வீசும் கடல்கப்பலாய் போராடுதே மனம்காதலால்
அயல்நாடு செல்லும் என்னைப் போகவிடாமல்
கயல்விழியால் கரைக்கிழுப்ப தேனோநெய்தல் நேரிழையே !

---கடல் கடந்து வெளிநாடு செல்கிறான் ....சிங்கப்பூருக்கோ ஆஸ்திரேலியாவுக்கோ
கரையிலிருந்து வழியனுப்பகிறாள் காதலி .கயல் விழியின் காதல் ஈர்ப்பால்
மனம் பரிதவிக்கிறது அந்த மனநிலையை கவிதையில் சொல்கிறான் காதலன்
சங்க இலக்கியமெனத் தோன்றும் இன்றயக்கவிதை
நெய்தல் --கடலும் கடல் சார்ந்த இடமும்

யாப்பார்வலர் பாவினத்தை அறிவர்
சங்க இலக்கியத்தை நினைவுகூறி நன்றி கூறும் கவிதை

எழுதியவர் : கவின் சாரலன் (13-Sep-22, 10:04 am)
பார்வை : 73

மேலே