அழுகின தக்காளி

அண்ணாச்சி... அரைகிலோ தக்காளி, ஒரு தயிர் பாக்கெட், 10 ரூபாய்க்கு பச்சை மிளகாய்... சீக்கிரம் கொடுங்க இனிதான் வீட்டுல போய் சமைக்கனும்.

எல்லாம் எடுத்து வச்சிட்டு "76 ரூபாய் கொடு" என்றார்.

மணி பர்ஸை திறந்து பார்த்தேன் ரூபாய் 50 மட்டுமே சில்லரை நோட்டுகளாக இருந்ததால்...

செல்போன் எடுத்து ஜியோ டேட்டா ஆன் பண்ணி (paytm) பேட்டிம்ல ரூபாய் போட்டேன்....
"அண்ணாச்சி பேட்டியம்ல ரூபாய் போட்டுருக்கேன் பொருளை கொடுங்க"
என்றேன்.

என்ன நினைத்தாரோ அண்ணாச்சி...
மறுபடியும் கூட்டி கழிச்சி...
" எம்புட்டு போட்ட...? 86 ரூபாய் வருது." என்றார்.
"அண்ணாச்சி இப்பதான 76 ரூபாய்னு சொன்னிங்க" என்று கேட்டபோது...
"டோட்டல் மிஸ்டேக்ப்பா.. இன்னும் 10 ஊவா கொடு" என்றார்.

மணிப்பர்ஸை திறந்து 10 ரூபாயை எடுத்து கொடுத்தேன்.

போகும்போது...

"அண்ணாச்சி அரைகிலோ தக்காளி என்ன விலை?"

"36 ரூபாய்"

"அண்ணாச்சி வருற வழியில ஒரு காய்கறி கடையில் 1 கிலோ தக்காளி 20 ரூபாய்னு போர்ட் தொங்குறத பார்த்தேன்"

"அது அழுகுன தக்காளிப்பா"

அழுகுனது தக்காளி அல்ல... டிஜிட்டல் இந்தியா. ஏட்டியம்ல துட்டு எடுத்தாலும் கமிஷன் புடிக்கிறான்க... UPI ல பே பண்ணுனாலும் விலைய கூட்டுறாங்க.
அழுகுனது தக்காளி இல்லடா டிஜிட்டல் இந்தியா.

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (14-Sep-22, 3:24 pm)
சேர்த்தது : பரிதிமுத்துராசன்
பார்வை : 195

மேலே