பரிதிமுத்துராசன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  பரிதிமுத்துராசன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  29-Sep-1959
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Sep-2022
பார்த்தவர்கள்:  100
புள்ளி:  9

என்னைப் பற்றி...

என் படைப்புகள்
பரிதிமுத்துராசன் செய்திகள்
பரிதிமுத்துராசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Nov-2022 3:03 pm

ஹாலோ... தம்பியா?

ஆமாம் அண்ணே... சொல்லுங்க

தம்பி... நாம பொண்ணு பார்க்க போன இடம் சரியில்லாம போச்சு...
அண்ணன் குரல் அழுகுரலாக இருந்தது...

"கடவுள் இல்லை தம்பி"

என்ன பதில் சொல்வது...?
பொறு அண்ணே எல்லாம் நல்லா நடக்கும்....

அன்று அவரது இளைய மகனுக்கு பெண் பார்க்க சென்றபோது அனைத்து உறவினர்கள் மத்தியிலும் அவரது பையன் அவமதிக்கப் பட்டான்.
அவனுக்கோ வயது 35 நிறமோ பனைகருப்பு... ஆனால் படித்ததோ MBA...
ஆனாலும் அவனுக்கு ஒரு வாழ்க்கை துணை கிடைக்கவில்லை...

அன்று நாங்கள் பார்த்த மணப்பெண்ணோ அப்படியொன்றும் அழகி இல்லை வெள்ளையும் இல்லை..
ஆனாலும் ஏன் அவள் மறுத்தாள் ? என்பதே புதிர்...

மீண்டும் எ

மேலும்

பரிதிமுத்துராசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Oct-2022 5:39 pm

மனிதன் இருக்கின்றானா?
கடவுள் கேட்கிறேன்..
இருந்தால்
என்னிடம் வரச்சொல்...
"நீ மனிதன் தானா?
மனிதாபிமானம் என்றால்
என்னவென்று தெரியுமா?

அன்பே சிவம் என்றேன்.
ஆனால்...
அன்பே இல்லாமல்
சாதி,இனம்,மதம் என்று
சங்கடங்கள் விளைவிப்பவன்
என்னை நேசிக்கும் மனிதனா...?
கடவுள் சிவன் கேட்கிறேன்.
"மனிதன் இருக்கின்றானா?"

ஆட்டுக்குட்டியை சுமந்து
சமாதானத்தை பேசினேன்.
ஆனால்...
உலகத்தில் நடக்கும் யுத்தங்களை
தூண்டிவிடும் இவன்தான்
என்னை நேசிக்கும் மனிதனா?
கடவுள் ஏசு கேட்கிறேன்.
"மனிதன் இருக்கின்றானா?"

நடக்கும் பாதையில்
புழு, பூச்சிகள் இருந்தால்
செத்துவிடும்
என்ற பாவம் எனக்கு வேண்டா

மேலும்

பரிதிமுத்துராசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Oct-2022 4:38 pm

" முதலாளி..."

மேலும்

அண்ணே நம்ம பெரிய அண்ணன் ரொம்ப சீரியஸா இருக்காங்க...போன் பண்ணி பேசு..."என்றாள் தங்கை...

"சரிம்மா... " என்ற நான் அவருக்கு என்ன பிரச்சனை என்று கூட கேட்க மனசு இல்லை...
அண்ணன்கள் நம் கூட பிறந்த உறவுகள்...
அவருக்கு மனைவி, பிள்ளைகள் வந்ததெல்லாம் இடையில் வந்த உறவுகள்...
பிறக்கும்போதே வந்த உறவுகள் பெரிதா? இல்லை இடையில் வந்த உறவுகள் பெரிதா? என்றால் என்னவென்று சொல்வது....

அண்ணனுக்கோ வயது 75 ஆகும்...
எனக்கு வயதோ 64 ஆகும் அவன் கெட்டவன் என்றால் அன்றே "நானே வருவேன்" படம்போல என்னை கொன்றிருக்கலாம்.... ஆனால் அவர் அதை செய்யவில்லை... தனக்கு என்று மனைவி பிள்ளைகள் வந்தபோதுதான் சுயநலமாக மாறிவிட்டார்...
நானும் அண்ணனாக பிறந்திருந்தால் இப்படித்தான் மாறி இருப்பேனோ?
மறுபடியும் போன் ஒலித்தது...
தங்கைதான் பேசினால்....

"பெரிய அண்ணன்னிடம் பேசினேன்... அண்ணன் அழுவுறங்க... 
"நான் பிழைக்க மாட்டேன் போல் தெரியுது... என்னால் நடக்க கூட முடியல... இல்லேன்னா நடந்து போய் கடலில் விழுந்து செத்துடுவேன்" என்று அழுகிறாங்க என்றாள்.

"ஏம்மா..அவர் மூத்த மகன் அயர்லாந்தில் மாசம் 7 லட்சம் சம்பாதிக்கிறான். இளைய மகன் சென்னையில் மாசம் 60 ஆயிரம் சம்பாதிக்கிறான். வங்கியில் வேலை செய்யும் மகள் மாசம் 50 ஆயிரம் சம்பாதிக்கிறாள். நல்ல ஆஸ்பிட்டலில் போய் சேர்க்க வேண்டியதுதானே" என்றேன்.

அண்ணே... சாகப்போறவருக்கே ஏன் செலவு பண்ணனும்னு கேட்கிறங்களாம்..."

"சரி என்னால் முடிந்த உதவியை செய்கிறேன் தங்கா" என்று போனை கட் செய்தேன்.

என் அண்ணன் எனக்கு எந்த கெடுதியும் செய்யவில்லை...
என்று எங்கள் வீட்டுக்கு ஒரு பணக்கார *மிராசு) வீட்டு பெண் (அண்ணி) மருமகளாக வந்தாரோ...
அடுத்த ஒரு வருடத்தில் நானும் என் தங்கையும்  தாய் தந்தை இல்லாத அனாதைகள் ஆகிவிட்டோம். அண்ணனும் அண்ணியாரும் சுயநலமுடன் தங்கள் தங்கள் பிள்ளைகள் முன்னேற்றத்தை மட்டுமே பார்த்தார்கள். 
ஆனாலும்....
எங்கள் தாய் தந்தையர்கள் செய்த புண்ணியத்தால் எனக்கும் என் தங்கைக்கும்  தானாகவே நல்ல வாழ்வு கிடைத்தது...
இன்று என் உடன் பிறப்பு மரண படுக்கையில்...

என்னால் தூங்க முடியவில்லை.

வங்கி கணக்கில் உள்ள இருப்பை பார்த்தேன்....

"அண்ணே... எப்படி இருக்கே?"

"யாரு.. யாரு பேசுறது...? கேட்கல"

"அண்ணே தம்பி பேசுறேன்... உடம்ப பார்த்துக்க...என்னால் முடிஞ்ச 10 ஆயிரம் ரூபாய் அனுப்பி இருக்கேன். உடம்ப பார்த்துக்க"

மேலும்

பரிதிமுத்துராசன் - பரிதிமுத்துராசன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
28-Sep-2022 5:14 pm

இன்று தமிழுக்கு பிறந்த நாள்...

தமிழை அன்பாக நேசித்த தமிழன்பனுக்கு பிறந்த நாள்...

சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு...
புதுவை அகன் அய்யாவிடம் இருந்து எனக்கு ஒரு அழைப்பு....

"கவியரசர் தமிழன்பன் அய்யா அவர்களின் பிறந்தநாளுக்கு விருது பெறும் எழுத்தாளர்களில் உன் பெயரும் சேர்த்துள்ளேன்" என்று

அதுவும் சென்னையில் என் இல்லம் இருக்கும் இடத்தின் அருகிலேயே விழா என்று அழைப்பிதழையும் அனுப்பி வைத்தார்...

என் துணைவியாரிடம் அழைப்பிதழை காண்பித்தப்போது "யார் இந்த பரிதி.முத்துராசன்?" என்ற கேள்வியுடன்...

அவன் நான்தான் என்றும் பரிதி.முத்துராசன் என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதுவதாக சொன்ன போது.....
ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தார்கள்

அப்புறம்தான் தெரிந்தது அந்த துள்ளல் எனக்கு அல்ல...
இல்லம்தோறும் தொலைக்காட்சியில் இன்பத் தமிழில் செய்தி வாசித்து பலர் இதயங்களில் இடம் பிடித்த...
அய்யா தமிழன்பன் அவர்களுக்கு என்று....

பிறகு அய்யா தமிழன்பன் அவர்களின் பிறந்த நாள் விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டு நானும் விருது பெற்ற நிகழ்வு மட்டுமல்ல....
அன்றிலிருந்து என் துணைவியார் மனதில் எனக்கும் ஒரு சிறப்பான இடம் இருந்தது...

இந்த சிறப்பினை எனக்கு வழங்கிய புதுவை அகன் அய்யா அவர்களை என் வாழ்நாளில் மறக்க முடியாது...🙏


மேலும்

உண்மைதான் . எனக்கும் அதில் கலந்து கொண்ட பெருமையாக உள்ளது . ஐயா அவர்களின் பிறந்த நாளை , ஒவ்வொரு தமிழனும் கொண்டாட வேண்டிய திருநாள் . ஐயா அவர்களை , மகா கவிஞர் அவர்களை வாழ்த்த வயதில்லை . சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் . ஐயா அவர்கள் நூறாண்டு கடந்து பல்லாண்டு வாழ்ந்திட விழைகிறேன் . அன்பு நண்பர் அகன் அவர்களுக்கு எனது நன்றி கலந்த வணக்கம் . பழனி குமார் 28-Sep-2022 10:38 pm
பரிதிமுத்துராசன் - பரிதிமுத்துராசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Sep-2022 3:24 pm

அண்ணாச்சி... அரைகிலோ தக்காளி, ஒரு தயிர் பாக்கெட், 10 ரூபாய்க்கு பச்சை மிளகாய்... சீக்கிரம் கொடுங்க இனிதான் வீட்டுல போய் சமைக்கனும்.

எல்லாம் எடுத்து வச்சிட்டு "76 ரூபாய் கொடு" என்றார்.

மணி பர்ஸை திறந்து பார்த்தேன் ரூபாய் 50 மட்டுமே சில்லரை நோட்டுகளாக இருந்ததால்...

செல்போன் எடுத்து ஜியோ டேட்டா ஆன் பண்ணி (paytm) பேட்டிம்ல ரூபாய் போட்டேன்....
"அண்ணாச்சி பேட்டியம்ல ரூபாய் போட்டுருக்கேன் பொருளை கொடுங்க"
என்றேன்.

என்ன நினைத்தாரோ அண்ணாச்சி...
மறுபடியும் கூட்டி கழிச்சி...
" எம்புட்டு போட்ட...? 86 ரூபாய் வருது." என்றார்.
"அண்ணாச்சி இப்பதான 76 ரூபாய்னு சொன்னிங்க" என்று கேட்டபோது...
"டோட்டல் மிஸ்டேக்ப

மேலும்

பரிதிமுத்துராசன் - பரிதிமுத்துராசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Sep-2022 4:42 pm

அன்று மதியம் வீட்டுக்கு சாப்பிட வரும்போது வழக்கம் போல் வீட்டு முன் இருக்கும் மரத்தடியில் என் இரு சக்கர வாகனத்தை நிறுத்தினேன்.
அப்போது மரத்தடியில் அரைகுறையாக சிறகு முளைத்து பறக்க முடியாத ஒரு காக்கா குஞ்சு மரத்தடியில் கிடந்ததை கண்டேன்.

எனக்கே உள்ள இறக்க குணத்தால் அதை காப்பாற்ற நினைத்தபோது....
என் பிடரி மண்டையில் யாரோ அடித்ததை உணர்ந்தேன்..
அவைகள் அந்த காக்கா குஞ்சின் இரண்டு பெற்றோர்கள். அதற்குள் வாட்ச்மேன் ஓடிவந்து...
"சார் அங்கே வண்டிய நுப்பாட்டாதீங்க... அங்க காக்க குஞ்சு பறக்க முடியாமல் விழுந்து கிடப்பதால் எல்லோரையும் காக்கா விரட்டி அடிக்குது" என்று கூவிய படி ஓடிவந்து என்னை அந்த காக்காக்களிடம

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே