மனிதன் இருக்கின்றானா

மனிதன் இருக்கின்றானா?
கடவுள் கேட்கிறேன்..
இருந்தால்
என்னிடம் வரச்சொல்...
"நீ மனிதன் தானா?
மனிதாபிமானம் என்றால்
என்னவென்று தெரியுமா?

அன்பே சிவம் என்றேன்.
ஆனால்...
அன்பே இல்லாமல்
சாதி,இனம்,மதம் என்று
சங்கடங்கள் விளைவிப்பவன்
என்னை நேசிக்கும் மனிதனா...?
கடவுள் சிவன் கேட்கிறேன்.
"மனிதன் இருக்கின்றானா?"

ஆட்டுக்குட்டியை சுமந்து
சமாதானத்தை பேசினேன்.
ஆனால்...
உலகத்தில் நடக்கும் யுத்தங்களை
தூண்டிவிடும் இவன்தான்
என்னை நேசிக்கும் மனிதனா?
கடவுள் ஏசு கேட்கிறேன்.
"மனிதன் இருக்கின்றானா?"

நடக்கும் பாதையில்
புழு, பூச்சிகள் இருந்தால்
செத்துவிடும்
என்ற பாவம் எனக்கு வேண்டாம்.
என்று எண்ணியே
பாதையெங்கும்
தூய்மை செயத்தே நடந்தேன்.
ஆனால்...
அந்த புழு, பூச்சிகளை கூட
தின்று ஏப்பம் விடும்
இவன்தான் என் மனிதனா?
புனிதன் புத்தன் கேட்கிறேன்.

அமைதி மார்க்கம்
என்று ஒன்றை நன்றே
சொல்லிக் கொடுத்தேன்..
ஆனால்...
உலக மானிட அமைதிக்கே
குந்தகம் செய்யும் சிலர்
என்னை தொழுவதும் எனோ?
இவன்தான் மனிதனா?
இறைத்தூதர் கேட்கிறேன்.

மனிதன் இருக்கின்றானா?
கடவுள் கேட்கிறேன்..
இருந்தால்
என்னிடம் வரச்சொல்...
"நீ மனிதன் தானா?

எழுதியவர் : பரிதி. முத்துராசன் (30-Oct-22, 5:39 pm)
சேர்த்தது : பரிதிமுத்துராசன்
பார்வை : 500

மேலே