தண்ணீரின் கண்ணீர்

அன்று
நதியில் விளையாடி
ஓடையில் ஓடும் நீரை
தனது கைகளால்
அள்ளி பருகி
தாகம் தனித்து
கொண்ட மனிதர்கள்
வாழ்ந்த பூமி இது...!!

ஆனால்...இன்றோ
மனிதர்கள்
நதிகளும், ஓடைகளும்
நடந்து வந்த பாதையை அடைத்து
கட்டிடங்களை கட்டி
விடுகின்றார்கள்

சில பல காரணங்களால்
தண்டனை புரிவோரை
தண்டிக்க தவறும்
வலிமை மிகுந்தவர்கள்...!!

ஓடையில்
ஓடுவதோ கழிவு நீர்
காலம் காலமாய்
ஓடையில் ஓடிவந்த நீர்
பாதை மாறி பயணம் செய்து
யாருக்கும் பயனின்றி....??

இன்று
தாகம் கொண்ட மனிதன்
குப்பிகளில்
சிறைப்படுத்திய
குடி நீரையும் ஆயிரம் முறை யோசித்துதான் பருக
வேண்டிய சூழ்நிலை.

தாயை பழித்தாலும்
தண்ணீரை பழிக்காதே
என்று முன்னோர்கள் சொல்லிய பழமொழி
பொய்த்து விட்டதே...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (30-Oct-22, 6:33 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 263

மேலே