கடவுள் இருக்கிறான் தம்பி-

ஹாலோ... தம்பியா?

ஆமாம் அண்ணே... சொல்லுங்க

தம்பி... நாம பொண்ணு பார்க்க போன இடம் சரியில்லாம போச்சு...
அண்ணன் குரல் அழுகுரலாக இருந்தது...

"கடவுள் இல்லை தம்பி"

என்ன பதில் சொல்வது...?
பொறு அண்ணே எல்லாம் நல்லா நடக்கும்....

அன்று அவரது இளைய மகனுக்கு பெண் பார்க்க சென்றபோது அனைத்து உறவினர்கள் மத்தியிலும் அவரது பையன் அவமதிக்கப் பட்டான்.
அவனுக்கோ வயது 35 நிறமோ பனைகருப்பு... ஆனால் படித்ததோ MBA...
ஆனாலும் அவனுக்கு ஒரு வாழ்க்கை துணை கிடைக்கவில்லை...

அன்று நாங்கள் பார்த்த மணப்பெண்ணோ அப்படியொன்றும் அழகி இல்லை வெள்ளையும் இல்லை..
ஆனாலும் ஏன் அவள் மறுத்தாள் ? என்பதே புதிர்...

மீண்டும் என் அண்ணன் மகனுக்கு ஒரு வரன் வந்தது...

ஏழைக்குடும்பம் என்றாலும் அவர்கள் திருமணம் நன்றாகவே நடந்தது...

சில நாட்களுக்கு பிறகு...

அண்ணனிடமிருந்து போன் வந்தது....

"கடவுள் இருக்கிறான் தம்பி""சரி அண்ணே" என்று சொல்லி
விட்டு...
குழப்பத்தில் விக்கியில் கடவுளை தேடினேன்...

"கடவுள் என்பவர் அண்டம் முழுவதையும் படைத்துக் காப்பவர் என்றும், அவர் எல்லாச் சக்திகளும் பொருந்தியவர் என்றும், இறப்பு, பிறப்பு, இரவு, பகல், இன்பம், துன்பம் போன்ற உலக வாழ்வில் தொடர்புடைய அனைத்தையும் கடந்து நிற்கும் ஏகாந்த (மறைபொருள்) நிலை என்றும் கடவுள் இருப்பதை நம்புபவர்கள் கருதுகின்றனர்"

எனக்கு என்னமோ அந்த கிழட்டு தாத்தா காதில் ஓதிய....
"கடவுளை மற, மனிதனை நினை" என்பது மட்டுமே ஒலிக்கிறது....

எழுதியவர் : பரிதி. முத்துராசன் (2-Nov-22, 3:03 pm)
சேர்த்தது : பரிதிமுத்துராசன்
பார்வை : 120

மேலே