கீரை
அம்மாவ்வ்... கீரை.. கீரை......
கீரை வாங்கிலியாம்மா...
உரம் போடாமே வீட்டுக் குப்பை
போட்டு வளத்ததுமா...வாங்குங்க..
வயதான பாட்டி தலையில் சுமந்தபடி..
கீரை கட்டு எவ்வளவு...?
கட்டு பத்து ரூபாமா..
சொல்லிக்கொண்டிருக்கும்போது
வாக்கிங் போன அறிவழகன்
கேட்டு வாசலுக்கு வந்தான்..
கீரையைப் பார்த்தத உடனே சாப்பிடனும்போல இருந்தது.
அப்படியொரு பிரஷ்ஷா இருந்தது.
பத்மா.. கீரை வாங்கு..
கொஞ்சம் இருங்க..
ரெண்டு கட்டு பதினஞ்சு ரூபாய்க்கு
தர்ரதா இருந்தா...தா
இல்லாட்டி வேணாம்.
கட்டாதுமா..அஞ்சு ரூபாய பார்க்காதீங்கமா...
அறிவழகன் சற்றே கோபமா
பத்மாவை பார்க்கும் போது
அவனோட ஒரே பெண் சுசித்ரா
குப்பைத் தொட்டியில் ஏதோ
பாக்ஸ் மாதிரி போடவந்தாள்..
என்னம்மா அது...
ஒன்னுமில்லைப்பா..நேத்து சொமோட்டா ஆர்டர் பண்ணி
சிக்கன் பிரியாணி சாப்பிட்டதுல
நல்லாவே இல்லை...பாதி வேஸ்ட்
அதான் குப்பைத்தொட்டில...
பத்மா ....பார்த்தியா இப்ப கொட்டப்போற பிரியாணி மதிப்பு
என்ன தெரியுமா...இருநூற்றி
ஐம்பது...
அதான் பத்மா.. நாம சாமார்த்திய
நடக்கிறதா நினைச்சு கீரை
வாங்கிறதுலேயும் தெருவோரக்
கடையிலேயும் பேரம் பேசுறோம்.
நகைக்கடையில ஜவுளிக்கடையில
அடிக்கிற கொள்ளையை கண்டுக்கிறதே இல்லை..
ஒன்னு தெரியுமா பத்மா..!
அரசு ஊழியர்களுக்கு
தடவை அகவிலைப்படி ஏத்துறதே
விலைவாசியை கணக்கில்
வச்சுதான்...அவங்களே இப்படி நடந்தால் எந்தவித சப்போர்ட்டுமில்லாத
இந்த ஏழை விவசாயிக்கு யார் ஆதரவு?
போ..போ..இனிமேலாவது அஞ்சுக்கும் பத்துக்கும் பேரம்
பேசாதே..அப்படியே அஞ்சு ரூபா
போனாலும் போகட்டும்..
ஏழை விவசாயிக்குத்தானே..
அறிவழகன் சொல்லச் சொல்ல
வாயடைத்து நின்றாள்..பத்மா..
அவளது மகளும் தான்..
இந்தாம்மா இருபது ரூபா..
ரெண்டு கட்டு கொடு என்றாள்
பத்மா..கணவனை பெருமிதமாய்
பார்த்தவாறு.
கீரைப் பாட்டி தள்ளாடியபடியே நகர்ந்தாள்.
அறந்தை ரவிராஜன்.